Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஈழத் தமிழர்களுக்கு உணவு, மருந்து-நெடுமாறன் துவக்கி வைத்தார்

ஈழத் தமிழர்களுக்கு உணவு, மருந்து-நெடுமாறன் துவக்கி வைத்தார்

Webdunia

, சனி, 8 செப்டம்பர் 2007 (13:29 IST)
யாழ்ப்பாண மக்களுக்காக சேகரிக்கப்பட்ட உணவு, மருந்துப் பொருட்கள் ஏற்றப்பட்ட வாகனத்தை தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் துவக்கி வைத்தார்.

திருச்சி நகரில் நடந்த நிகழ்ச்சியில் அந்த உணவு, மருந்து வாகனத்தை வழியனுப்பி வைத்த நெடுமாறன், அது தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை வழியாக செப்டம்பர் 11ஆம் தேதி நாகப்பட்டினத்திற்குச் செல்லும் என்றும், அங்கிருந்து கடல்கள் மூலம் யாழ்ப்பாணத்திற்குக் கொண்டு செல்லப்படும் என்றும் கூறினார்.

காவல்துறை தங்களுக்கு அனுமதி வழங்கவில்லை என்றாலும், திட்டமிட்டபடி செப்டம்பர் 12ஆம் தேதி நாகப்பட்டினத்தில் இருந்து யாழ்ப்பாணத்தை நோக்கி செல்வோம் என்று நெடுமாறன் கூறினார்.

நிகழ்ச்சியில் மறுமலர்ச்சி திமுக பொதுச் செயலர் வைகோ உள்ளிட்ட தமிழீழ ஆதரவாளர் அமைப்பைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil