அனுமதியின்றி மருத்துவ முகாம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் நீரஜ் மித்தல் கூறினார்.
தனியார் நிறுவனங்கள் மருத்துவம் மற்றும் தடுப்பூசி முகாம்களை நடத்தி வருகின்றன. இதற்கு முறையான அனுமதி பெற வேண்டும். அனுமதியின்றி முகாம்கள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கர்ப்பத்தில் உள்ள குழந்தையை ஆணா, பெண்ணா என்று தெரிவிப்பது சட்டப்படி குற்றமாகும். இதை மீறினால் மருத்துவமனையின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று நீரஜ் மித்தல் தெரிவித்தார்.
ரத்ததான விழிப்புணர்வு மற்றும் ரத்த வங்கிகள் குறித்த பேனர்கள் அனைத்து மருத்துவமனையிலும் வைக்க வேண்டும் என்றார் ஆட்சியர்.