தலித் கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு சலுகைகள் அளிக்க கோரி விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன் கூறினார்.
மதம் மாறிய தலித் கிறிஸ்தவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து தலித் இந்துக்களுக்கு வழங்குவதுபோல் சலுகைகளையும், உரிமைகளையும் வழங்க வேண்டும் என திருமாவளவன் தெரிவித்தார்.
இட ஒதுக்கீடு தொடர்பான அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடுவதால் இட ஒதுக்கீடு தொடர்பான தனிச் சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டு வர வேண்டும் என்றார் திருமாவளவன்.