சேது சமுத்திர திட்டத்தால் எந்த வருவாயும் கிடையாது என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார்.
சேது சமுத்திர திட்டத்துக்காக ராமர் பாலத்தை இடிக்கக் கூடாது என்று பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மாற்று வழியில் இந்த திட்டத்தை நிறைவேற்றுவதே சரியாக இருக்கும். மத்திய அரசு தெரிவிப்பது போல சேது சமுத்திரத் திட்டத்தால் தூத்துக்குடி, சென்னை ஆகிய துறைமுகங்களுக்கு எந்தவித வருவாயும் கிடைக்காது என சுப்பிரமணிய சுவாமி கூறினார்.
இந்த திட்டத்துக்காக ராமர் பாலத்தை இடிக்க இலங்கை அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது பற்றி ஆராய 34 பேர் அடங்கிய குழுவை இலங்கை அரசு அமைத்துள்ளது என்று சுவாமி தெரிவித்துள்ளார்.