ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை சாந்தி மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்!
தனது வீட்டிற்கு வெளியே மயங்கிய நிலையில் இருந்து சாந்தியைக் கண்ட உறவினர்கள், அவரை உடனடியாக அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்துள்ளனர். சாந்தியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்று உறுதி செய்துள்ளனர்.
இது குறித்து விசாரணை நடத்திய காவல் துறையினர், இரண்டு நாள் சென்னை பயணத்திற்குப் பிறகு இன்று காலை தனது வீட்டிற்கு திரும்பிய சாந்தி விரக்தியுடன் காணப்பட்டதாகவும், சாந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளாரா என்றும் சந்தேகிக்கின்றனர்.
சாந்தியின் இந்நிலைக்கு சரியான காரணம் இன்னும் தெரியவில்லை என்றும், இது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.