கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு சந்தை மதிப்பை விட அதிக விலை நிர்ணயிக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது!
சாத்தான்குளத்தில் டாடா நிறுவனம் சார்பில் டைட்டானியம் தொழிற்சாலை அமைப்பது குறித்து அந்த பகுதியில் உள்ள மக்களிடம் காங்கிரஸ் சார்பில் கருத்து கேட்கப்பட்டது. இது குறித்த அறிக்கையை முதல்வர் கருணாநிதியிடம் காங்கிரஸ் கட்சி சமர்ப்பித்துள்ளது.
குடியிருப்பு பகுதிகளை சுற்றி ஒரு கிலோ மீட்டர் தூரமுள்ள நிலங்களை கையகப்படுத்தக் கூடாது. குடிநீர் ஆதாரம் இருக்கின்ற பகுதிகளை சுற்றி 500 மீட்டர் தூரத்தில் எவ்வித மணல் அள்ளும் பணியும் நடக்கக் கூடாது. கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு சந்தை விலை மதிப்பை விட எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அதிக விலை வழங்க வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.
எந்த சூழ்நிலையிலும் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.2 லட்சத்துக்கு குறையாமல் வழங்கப்பட வேண்டும். நிலம் கையகப்படுத்தப்படுபவர்களின் குடும்பங்களில் ஒருவருக்கு கண்டிப்பாக வேலை வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.