அணு சக்தி ஒப்பந்தம் குறித்து மத்திய அரசு அமைக்கும் குழுவில் தி.மு.க.வும் இடம் பெற வேண்டும் என்று இடதுசாரி கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இந்த நிலையில் முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
இந்த சந்திப்பின் போது, அணு சக்தி உடன்பாட்டால் இந்தியா தனது அணுசக்தி தொடர்பான தேவைக்கு அமெரிக்காவையே நம்பியிருக்க வேண்டிருக்கும் நிலை உருவாகும் என்று காரத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை மத்திய அரசு அமல்படுத்த விரும்பினால், மக்கள் வேறு விதமாக தீர்மானித்து விடுவார்கள் என டி.ராஜா கூறினார்.