மாணவர்களுக்கு முன்மாதிரியாக ஆசிரியர்கள் செயல்பட வேண்டும் என ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா கூறியுள்ளார்!
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாள் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. அவர் தலைசிறந்த ஞானி. மகத்தான கல்வியாளர். கல்விக்கு அடித்தளம் ஆசிரியர் - மாணவர் உறவுதான். கல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து விடக்கூடாது. தொடர்ந்து படித்துக் கொண்டே இருக்க வேண்டும். பணியில் ஈடுபடும் அர்ப்பணிப்பும் முழுமையாக இருக்க வேண்டும் என்று பர்னாலா குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரியர்களின் ஆளுமை மாணவர்களை வடிவமைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. மாணவர்களின் முன்மாதிரியாக ஆசிரியர்கள் செயல்பட வேண்டும் என்றும் ஆளுநர் கூறியுள்ளார்.