தாம்பரம் நகராட்சியில் தற்போது குடிநீர் பிரச்சினை கடுமையாக ஏற்பட்டுள்ளது. உடனடியாக இந்த பிரச்சினையை அரசு தீர்க்க வலியுறுத்தி அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்துவார்கள் என்று கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
தாம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் 10 முதல் 15 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. நகர மக்களுக்கு தினந்தோறும் குடிநீர் வழங்க வேண்டும், மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றக் கோரி அ.தி.மு.க. காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம் சார்பில் வரும் 5 ஆம் தேதி தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.