தமிழை கட்டாய மொழிப் பாடமாக்கிய முதல்வர் கருணாநிதிக்கு தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.
அன்னைத் தமிழை வளர்க்க கண்ணும் கருத்துமாய் இருந்து காரியமாற்றுவது கலைஞர் தலைமையிலான தி.மு.க. அரசு. தமிழை கட்டாயப் பாடமாக்கியது போதாது, பயிற்று மொழியாக மாற்ற வேண்டும் என்று அரசு பிறப்பித்த ஆணை உச்ச நீதிமன்றத்தால் முடக்கப்பட்ட நிலையில் முதலமைச்சர் கருணாநிதி தமிழை கட்டாயப் பாடமாக்க கொள்கை முடிவெடுத்து சட்டமன்றத்தில் நிறைவேற்றியதால்தான் இது அரசின் கொள்கை முடிவென ஏற்று நீதிமன்றம் உத்தரவிட்டது என தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச் செயலாளர் க. மீனாட்சி சுந்தரம் கூறியுள்ளார்.
இந்த அரிய தீர்ப்பு உண்மைத் தமிழர்களின் உளமார்ந்த வரவேற்பிற்குரியதாகும். தமிழை கட்டாயப் பாடமாக்கி அது தொடர்பான வழக்கிலும் வெற்றி பெற்ற முதலமைச்சர் கருணாநிதியை பாராட்டுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.