தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல் இல்லை. எனவே பொது மக்கள் அச்சமடையத் தேவையில்லை என்று காவல்துறை தலைமை இயக்குநர் ராஜேந்திரன் கூறினார்!
ஐதராபாத் குண்டு வெடிப்புக்கு பின்னர் தமிழகத்தில் காவல்துறையினர் உஷார்படுத்தப் பட்டுள்ளனர். தீவிரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவவில்லை. பொது மக்கள் அச்சமடைய வேண்டாம். பாதுகாப்பு தொடர்பாக யார் வீண் வதந்திகளை கிளப்பினாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தலைமை இயக்குனர் எச்சரிக்கை விடுத்தார்.
இந்தியாவின் அமைதியான மாநிலங்களில் தமிழகம் ஒன்று. வேலூரில் படித்த மாணவி ரப்ஜானி 2008 ஆம் ஆண்டு வரை இந்தியாவில் தங்கி இருக்க விசா வைத்துள்ளார். ஹைதராபாத் குண்டுவெடிப்பு தொடர்பாக அந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்யவில்லை. உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லாததால் அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என்று காவல்துறை தலைமை இயக்குனர் ராஜேந்திரன் கூறினார்.