காவலர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆணையர்
நமது திருச்சி செய்தியாளர்
ஹைதராபாத் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் காவல்துறையினர் அதிரடி சோதனை ஈடுபட்டு வருகிறார்கள்!
திருச்சி மாநகரில் காவல்துறையினர் கடந்த 2 ஆம் தேதி அதிகாலை 3 மணி முதல் காலை 7 மணி வரை வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது, மன்னார் நான்கு வழிச்சாலையில் இரு சக்கர வாகனத்தை மடக்கி காவல்துறையினர் சோதனை செய்தனர். அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்கள் கண்டுபிடித்தனர். மற்றொரு சோதனையில் நம்பர் பிளேட் இல்லாத வாகனத்தில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தியதில் முண்ணுக்குப் பின் முரணாக தகவல் கூறினர்.
தலைமை தபால் நிலையம் அருகே காரை மறித்து காவல்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, வெடி மருந்து, அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களை கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில், அவர்கள் அனைவரும் மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜவால் அனுப்பிய ஆட்கள் என்று தெரியவந்தது. காவல்துறையினருக்கு அதிர்ச்சி கொடுப்பதற்காகவே இந்த சோதனை நடத்தப்பட்டது என்று ஆணையர் தெரிவித்தார்.