சென்னை நகரில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகை எங்கிருந்தாலும் அகற்றப்படும் என்று மேயர் மா.சுப்பிரமணியம் கூறினார்.
அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளை அகற்றும் படி முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி சென்னை நகரில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மேயர் தெரிவித்தார்.
சென்னை மாநகரில் அனுமதியின்றி விளம்பரப் பலகை எங்கு இருந்தாலும் அகற்றப்படும் என மேயர் உறுதிப்பட கூறினார்.