"எந்த கல்வியாக இருந்தாலும் மனிதத் தன்மையை ஏற்படுத்த வேண்டும்’’ என்று பாரதிதாசன் பல்கலைக்கழக துணை வேந்தர் பொன்ன வைக்கோ கூறினார்.
ஸ்ரீரங்கம் ஆண்டவன் கல்லூரியில் புதிய மாணவர் வரவேற்பு விழாவும், கிராம தத்தெடுப்பு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு பேசுகையில், நாட்டில் 60 சதவீத மககள் கிராமப் புறங்களில் வாழ்கிறார்கள். எனவே நாட்டுப்புறங்கள் வளர்ந்தால்தான் நாடு வளரும், நாட்டின் பொருளாதாரம் வளரும் என்றார்.
மாணவர்கள் கல்வி கற்றால் மட்டும் போதாது. கல்வியைக் கொண்டு அறிவைப் பெற வேண்டும், அந்த அறிவைக் கொண்டு பொருள் ஈட்ட வேண்டும், அந்த பொருளைக் கொண்டு மனிதனாக மாற வேண்டும். எதையும் நம்மால் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை வேண்டும் என்று துணைவேந்தர் கூறியுள்ளார்.
ஆங்கிலத்தில் பேசுவது என்பது முதலில் அச்சத்தை தரும். அந்த முயற்சியை வென்றுவிட்டால் அது வாழ்க்கையில் வெற்றி பெற்றதாகி விடும். எந்தவொரு கல்வியாக இருந்தாலும் அது மனிதத் தன்மையை ஏற்படுத்த வேண்டும் என்றும் துணைவேந்தர் பொன்ன வைக்கோ கூறியுள்ளார்.