தமிழகத்தில் முதன் முறையாக திருச்சியில் மின்னணு சட்ட நூலகம் தொடங்கப்பட்டுள்ளது!
கடந்த 1 ஆம் தேதி இதனை தொடங்கி வைத்து பேசிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எலீப் தர்மாராவ், இந்த மின்னணு சட்ட நூலகம் மூலம் உச்ச நீதிமன்றத்தில் அளிக்கப்படும் தீர்ப்புகளை அன்றே தெரிந்து கொள்ள முடியும் என்று தெரிவித்தார்.
உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் வழங்கப்படும் தீர்ப்புகளை இனிமேல் கணினி மூலம் பெற முடியும். மூத்த வழக்கறிஞர்களைவிட, இளம் வழக்கறிஞர்களுக்கு அதிக வாயப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இவற்றை அவர்கள் பயன்படுத்திக் கொள்வதோடு தங்களது தொழில் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று நீதிபதி தர்மராவ் கூறினார்.