Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜவ்வரிசி ஆலை வேலை நிறுத்தம் நீடிப்பு

ஜவ்வரிசி ஆலை வேலை நிறுத்தம் நீடிப்பு

Webdunia

, திங்கள், 3 செப்டம்பர் 2007 (10:22 IST)
ஜவ்வரிசி ஆலை உற்பத்தியாளர்கள் மேற்கொண்டுள்ள காலவரையற்ற வேலை நிறுத்தத்தினால் மரவள்ளி கிழங்கு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஒன்றாம் தேதி துவங்கி இன்று 3வது நாளாக வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது. ஆனால் அரசு தரப்பில் இருந்து எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை.

தமிழகத்தில் சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் மரவள்ளி கிழங்கு பயிரிடப்படுகிறது. இந்த கிழங்கில் இருந்து ஜவ்வரிசியும், தோலுடன் மாவாக அரைத்து ஸ்டார்ச்சும் தயாரிக்கப்படுகிறது. மாவு சம்பந்தப்பட்ட உணவு பொருள் தயாரிக்க ஸ்டார்ச்சும், வட மாநில மக்களின் தினசரி உணவாக ஜவ்வரிசியும் பயன்படுகிறது. தமிழகத்தில் உள்ள 400 ஜவ்வரிசி, ஸ்டார்ச் தொழிற்சாலை மூலம் தினமும் 20 ஆயிரம் மூட்டை ஜவ்வரிசி, ஸ்டார்ச் உற்பத்தி செய்யப்படுகிறது. ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச்சை சேகோ சர்வ் நிறுவனம் கொள்முதல் செய்கிறது.

அதற்கென அந்நிறுவனம் கடுமையான தரக்கட்டுப்பாடு நிபந்தனைகளை விதித்துள்ளது. அந்த நிபந்தனைகளுக்கு உட்படாத ஜவ்வரிசி ஸ்டார்ச்சை சேகோ சர்வ் நிறுவனம் நிராகரிக்கிறது. சேகோ சர்வ் நிறுவனம் நிராகரிக்கும் ஜவ்வரிசியை விலை குறைத்து விற்பனை செய்தாக வேண்டிய சூழ்நிலைக்கு உற்பத்தியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இப்பிரச்னை தொடர்பாக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தலைமையில் நடத்தப்பட்ட முத்தரப்பு கூட்டத்தில் எவ்வித உடன்பாடுமஏற்படவில்லை. பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் மாநிலம் முழுவதும் உள்ள 400 ஜவ்வரிசி ஆலைகள் நேற்று முன்தினம் மூடப்பட்டன. நேற்று இரண்டாவது நாளாக போராட்டம் நீடிக்கிறது. இதன் காரணமாக மரவள்ளி கிழங்கு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாள் ஒன்றுக்கு பலகோடி இழப்பு ஏற்படுவதால் அரசு உடனடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டும் என மரவள்ளி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil