Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கலர் "டிவி' வழங்குவதில் நாமக்கல் முதலிடம்

கலர்

Webdunia

, வியாழன், 30 ஆகஸ்ட் 2007 (12:12 IST)
இலவச வண்தொலைக்காட்சிப்பெட்டி வழங்குவதில் மாநிலத்தில் நாமக்கல் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளதாக மாவட்ஆட்சியர் சுந்தரமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை புதுப்பித்தல் மற்றும் சீரமைப்பு பணிகளுக்கு ரூ. 5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் சேந்தமங்கலம் அரசு மருத்துவமனைக்கு ரத்தசேமிப்பு வங்கி அறை மற்றும் சீரமைப்பு பணிகளுக்கு ரூ.55 லட்சமும், ராசிபுரம் மருத்துவமனையில் பல்வேறு பணிகளுக்கு ரூ.1 கோடியே ஆறு லட்சத்து 25 ஆயிரமும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மருத்துவமனைக்கு ரூ.2 கோடியே 25 ஆயிரமும், பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு ரூ. ஐந்து லட்சமும், திருச்செங்கோடு மருத்துவமனைக்கு ரூ.1 கோடியே 65 லட்சமும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நவீன மயமாக்கப்பட உள்ளது.

நடப்பு ஆண்டு இலவச வீட்டு மனை பட்டா 1,200 பேருக்கு வழங்க அரசு நிர்ணயித்துள்ளது. தற்போது வரை 1,333 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

நாளை உள்ளாட்சி துறை அமைச்சர் பங்கேற்கும் விழாவில், ஆயிரத்து 174 பேருக்கு பட்டா வழங்கப்படுகிறது. இதுவரையில், 1315 ஏக்கர் நிலம் விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. ஐந்தாவது முறையாக 342 ஏக்கர் நிலம் வழங்கப்பட உள்ளது. மாவட்டம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகள் 59 ஆயிரத்து 786 பேருக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியை வழங்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

இதுவரை 54,955 பேருக்கு இலவச வண்ணததொலைக்காட்சிபபெட்டி வழங்கப்பட்டுள்ளது. மீதியுள்ளவர்களுக்கு நாளை நடக்க உள்ள விழாவில் வழங்கப்படுகிறது. இலவச கலர் "டிவி' வழங்கும் திட்டத்தில் மாநிலத்திலே நாமக்கல் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil