தங்களையும் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரி தலித் கிறித்தவ விடுதலை அமைப்பு ஆர்ப்பாட்டம் செய்துள்ளது!
மதம் மாறிய தாழ்த்தப்பட்டவர்களை பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் சேர்க்கக்கூடாது என்றும், அவர்கள் எந்த சாதியில் இருந்து மதம் மாறினார்களோ அதன்படியே பட்டியலிடப்பட வேண்டும் என்று கோரி திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தலித் கிறித்தவர்களையும், தலித் முஸ்லிம்களையும் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் மத்திய அரசுசேர்க்க வேண்டும் என்று கோரியும், இதற்காக நீதிபதி ரங்கநாதன் மிஸ்ரா குழு அளித்த பரிந்துரையின் படி அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றும், இதற்கு தமிழக முதலமைச்சர் முயற்சிக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.