Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தனியார் பொறியியல் கல்லூரியில் ஆய்வு

Advertiesment
தனியார் பொறியியல் கல்லூரியில் ஆய்வு

Webdunia

, செவ்வாய், 31 ஜூலை 2007 (12:56 IST)
கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பது பற்றி அண்ணா பல்கலைக்கழக ஆய்வுக் குழுவினர் ஆய்வு நடத்தினர்.

பொறியியல் கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக அண்ணா பல்கலைக்கழகத்துக்கும், தமிழக உயர்கல்வித் துறைக்கும் புகார்கள் வந்தன.

அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் கடந்த சில நாட்களாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இதற்காக அண்ணா பல்கலைக்கழகம் ஆய்வுக்குழு ஒன்றை அமைத்தது. கோவை அரசு பொறியியல் கல்லூரியை சேர்ந்த பேராசிரியர்கள் கொண்ட 11 குழுக்கள் சேலம், ஈரோடு மாவட்டங்களில் ஆய்வு செய்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஏழு தனியார் பொறியியல் கல்லூரிகளிலும் மூன்று குழுவினர் நேற்று ஆய்வில் ஈடுபட்டனர். கல்லூரிகளின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன.

Share this Story:

Follow Webdunia tamil