தமிழகத்திலும், புதுச்சேரியிலும் அடுத்த 2 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்து வருகிறது. நேற்று முதல் சென்னையில் விடாமல் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், இமய மலையின் அடிவாரத்தில் பருவக்காற்றின் அச்சு உள்ளது. அதன் காரணமாக தமிழகத்தில் மழை பெய்கிறது. தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களிலும் மழை பெய்து இருக்கிறது. இந்த மழை மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று சென்னை வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் ரமணன் கூறினார்.
சென்னையில் நேற்று அதிகாலை முதல் மழை தூறிக்கொண்டே இருக்கிறது.