காவிரி டெல்டா மாவட்டங்களில் நீர்ப் பாசனத்தை மேம்படுத்த ரூ.400 கோடி திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களை தமிழக அரசு நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது என்று பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்!
தஞ்சையில் பொதுப் பணித்துறை அதிகாரிகளுடனும், விவசாயிகளுடனும் கலந்தாலோசித்த அமைச்சர் துரைமுருகன், பாசன வசதிகளை மேம்படுத்த ஏற்கனவே 20 கோடியில் சில திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகக் கூறினார்.
நபார்டு வங்கி உதவியுடன் கொள்ளிடக் கரையை ரூ.200 கோடி செலவில் பலப்படுத்துவது, கல்லணைக் கால்வாயின் புதுக்கோட்டை பரப்பை மேம்படுத்தவும், பல்வேறு குளங்கள் அமைக்கவும், சொட்டு நீர்ப் பாசனத்தை நடைமுறைப்படுத்தவும் ரூ.147.50 கோடி செலவிடப்படும் என்றும் துரைமுருகன் கூறினார். (யு.என்.ஐ.)