தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் டாடா நிறுவனம் அமைக்கயுள்ள டைட்டானியம் தொழிற்சாலை திட்டத்திற்கு பல்வேறு தரப்பினரிடையே வந்த எதிர்ப்பை அடுத்து, அத்திட்டம் செயல்படுத்துவதை நிறுத்தி வைப்பதாக முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் டைட்டானியம் தொழிற்சாலை அமைக்க தமிழக அரசு, டாடா நிறுவனத்துடன் கடந்த ஜூன் மாதம் 28 ஆம் தேதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
இத்திட்டத்திற்கு அதிமுக, பாமக, இடது சாரி கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து வந்தன. இத்திடத்தை உடனடியாக நிறுத்தாவிட்டால் தனது தலைமையில் தூத்துக்குடியில் போராட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் டைட்டானியம் தொழிற்சாலை அமைக்கும் திட்டம் செயல்படுத்துவதை நிறுத்தி வைப்பதாக முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிடுள்ள அறிக்கையில், பின்தங்கிய மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களின் வளர்ச்சிக்காவே இத்திட்டம் கொண்டுவரப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இத்திட்டம் தொடங்குவது குறித்து அங்குள்ள மக்களின் நிலைப்பாட்டை அறிய உண்மை அறிதல் குழு, அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
மக்களின் ஆணைக்கு அரசு கட்டுப்படும் என்றும், இத்திட்டம் தொடர்பாக அப்பகுதி மக்களிடம் கருத்துகளை கேடறிந்த பின்னர் இறுதி முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெவித்துள்ளார்.