Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிளசன்ட் ஸ்டே ஓட்டலை இடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

பிளசன்ட் ஸ்டே ஓட்டலை இடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

Webdunia

, வியாழன், 26 ஜூலை 2007 (16:03 IST)
கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் கீழ்தளம், முதல் தளத்தை தவிர மற்ற 5 மாடிகளையும் இடிக்க சென்னை உயர் நீதிமனறம் உத்தரவிட்டுள்ளது.

கொடைக்கானலில் பிளசன்ட் ஸ்டே என்ற பெயரில் 7 மாடி ஓட்டல் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த ஓட்டலுக்கு தரைதளம், முதல் தளம் கட்ட மட்டுமே அனுமதி பெறப்பட்டது. ஆனால் அதை மீறி 7 மாடி அடுக்குகள் கொண்ட கட்டடமாக ஓட்டல் கட்டப்பட்டுள்ளது.

விதிமுறைகளை மீறி இந்த ஓட்டல் கட்டடம் கட்டப்பட்டு இருப்பதாக கூறி, பழனிமலை பாதுகாப்பு அமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், நகராட்சி கட்டட விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டதை அடுத்து, கட்டட உரிமையாளர் நீதிமன்றத்தில் கட்டடத்தை இடிக்க தடை வாங்கினார்.

இதை எதிர்த்து பழனி மலை பாதுகாப்பு அமைப்பு மேல் முறையீடு செய்தது. கடந்த பல ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கை நீதிபதிகள் முகோபாத்யாயா, சுகுணா ஆகியோர் விசாரித்து இன்று தீர்ப்பு வழங்கினர்

அதில், தமிழக அரசு கொண்டு வந்த நகராட்சி விதி திருத்தம் செல்லாது என்றும், 6 மாதத்துக்குள் ஓட்டலின் கீழ்தளம், முதல் தளத்தை தவிர மற்ற 5 மாடிகளையும் இடித்து தள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

Share this Story:

Follow Webdunia tamil