குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரதீபா பாட்டீல் வெற்றி பெற காரணமாக இருந்து முதலமைச்சர் கருணாநிதிக்கு பாராட்டு தெரிவித்து தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று கூடியது. இக்கூடத்தில் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, மு.க,ஸ்டாலின் உள்பட அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரதீபா பாட்டீல் வெற்றி பெற காரணமாக இருந்த தமிழக முதலமைச்சர் கருணாநிதிக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தியாவில் பெண் ஒருவர் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்க தொடக்கம் முதலே காரணமாக இருந்து, அதற்காக ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தியோடும், இடது சாரிகள் தலைவர்களுடனும் இணைந்து முதலமைச்சர் கருணாநிதி பேச்சு வார்த்தை நடத்தி உள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரதீபா பாட்டீல் 3 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற காரணமானவர்களில் முக்கியமான ஒருவராக திகழும் முதலமைச்சர் கருணாநிதிக்கு இந்த அமைச்சரவை பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.