சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்டதால் சென்னையில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
சென்னையில் கடந்த சில நாட்களாக பகலில் வெய்யிலும், இரவில் மழையுமாக இருந்து வந்தது.
நேற்று நள்ளிரவிலும் சென்னையின் பல இடங்களில் பலத்த மழை பெய்துள்ளது. இன்று பகலிலும் வானம் மேக மூட்டத்துடனேயே இருந்தது.
அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.