Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வேலையில்லா இளைஞர்களுக்கு உதவிதொகை

வேலையில்லா இளைஞர்களுக்கு உதவிதொகை

Webdunia

, ஞாயிறு, 22 ஜூலை 2007 (13:37 IST)
படித்து முடித்து வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு மூன்றாவது கட்டமாக உதவித் தொகை வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் கருணாநிதி நாளை துவக்கி வைக்கிறார்.

வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

அதன்படி, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒரு கட்டமாகவும், கடந்த பிப்ரவரி மாதம் இரண்டாம் கட்டமாகவும் துவக்கி வைக்கப்பட்டது.

அதன்படி 3வது கட்டமாக திட்டப் பணிகளுக்கான பணிகள் நடைபெற்று வந்தன. பணிகள் முடிந்து இத்திட்டம் நாளை முதல் செயல்படுத்தப்பட உள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் 150 ரூபாய், பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் 200 ரூபாய், இளங்கலைப் பட்டதாரி, முதுநிலைப் பட்டதாரிகளுக்கு மாதம் 300 ரூபாய் வீதம் உதவித்தொகை வழங்கும் புதிய திட்டம் முதற்கட்டமாக 11.11.2006 அன்று திருச்சியிலும், இரண்டாம் கட்டமாக, இரண்டரை லட்சம் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் 24.2.2007 அன்று கோவையிலும் முதலமைச்சர் கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்டது.

தற்போது, மூன்றாவது கட்டமாக, 3,38,000 இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் பணிகளை முதல்-அமைச்சர் கருணாநிதி 29.7.2007 அன்று சென்னையில் தொடங்கி வைக்கிறார். அதே நாளில் தமிழகம் முழுவதும் நடைபெறவிருக்கும் விழாக்களில், அமைச்சர்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித் தொகைகளை வழங்குகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil