மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதன் கொள்ளளவான 120 அடியையும் தாண்டி 121 அடியை எட்டியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் பெய்து வந்த தென்மேற்கு பருவ மழையால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது.
இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்தது. இந்நிலையில் தற்போதும் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் வரத்து அதிகமாகவே இருக்கும் நிலையில் அணையின் நீர்மட்டம் 121,03 அடிக்கு உள்ளது. இது அணையின் அபாயகரமான நிலை என்பது குறிப்பிடத்தக்கது.
அணைக்கு தற்போது விநாடிக்கு 44,081 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது, அணையில் இருந்து விநாடிக்கு 38,722 கன அடி நீர் பாசனத்திற்காக திறந்துவிடப்பட்டுள்ளது.