Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழ்நாட்டில் 3 தேச நெடுஞ்சாலைகள் : ரிலையன்சிற்கு ஒப்பந்தம்!

தமிழ்நாட்டில் 3 தேச நெடுஞ்சாலைகள் : ரிலையன்சிற்கு ஒப்பந்தம்!

Webdunia

, வியாழன், 19 ஜூலை 2007 (21:13 IST)
தமிழ்நாட்டில் 400 கி.மீ. தூரத்திற்கு 3 தேச நெடுஞ்சாலைகளை அமைப்பதற்கு தேச நெடுஞ்சாலைகள் ஆணையத்திடம் இருந்து ரிலையன்ஸ் எனர்ஜி நிறுவனம் ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது!

4 வழிப்பாதையாக 400 கி.மீ. தூரத்திற்கு இடப்படும் இத்திட்ட மதிப்பீடு ரூ.2,320 கோடியாகும். 4 வழிப்பாதை அமைத்து நிர்வகித்து தேச நெடுஞ்சாலைத் துறைக்கு அளிக்கும் வி.ஓ.டி. அடிப்படையில் இந்த ஒப்பந்தத்தை ரிலையன்ஸ் பெற்றுள்ளது.

சேலத்தில் இருந்து உளுந்தூர்பேட்டைக்கு (தேச நெடுஞ்சாலை எண்-68) 136 கி.மீ. நீள 4 வழிப்பாதை. திட்டச் செலவு ரூ.941 கோடி.

80 கி.மீ. நீளத்திற்கு திருச்சி - கரூர் இடையே (தேச நெடுஞ்சாலை எண்-67) ரூ.516 கோடி செலவில் 4 வழிச்சாலை.

திருச்சி - திண்டுக்கல் இடையே (தேச நெடுஞ்சாலை-45) 85 கி,மீ. நீளத்திற்கு 4 வழிச்சாலை. திட்டச் செலவு ரூ.576 கோடி, இம்மூன்றிற்கும் ரிலையன்ஸ் ஒப்பந்தம் பெற்றுள்ளது. (யு.என்.ஐ.)

Share this Story:

Follow Webdunia tamil