Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஹஜ் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க கோரிக்கை

Advertiesment
ஹஜ் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க கோரிக்கை

Webdunia

, புதன், 18 ஜூலை 2007 (17:27 IST)
தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழ்நாடு ஹஜ் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

சென்னையில் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஹஷ்ரத் தஸ்தகீர் பாபாசாஹிப் தர்காவின் 160 வது ஆண்டு சந்தனக் கூடு திருவிழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ் நாடு ஹஜ் குழுவின் துணைத் தலைவர் அபு பக்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர் .

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அபு பக்கர், தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ள ஒதுக்கப்பட்ட பயணிகளின் எண்ணிக்கை போதுமானவை அல்ல என்று கூறினார்.

எனவே தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினர்.

Share this Story:

Follow Webdunia tamil