Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பவானிசாகர் 100 அடியை தொட்டது

Advertiesment
பவானிசாகர் 100 அடியை தொட்டது

Webdunia

, புதன், 18 ஜூலை 2007 (12:15 IST)
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ளது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த உயரம் 120 அடியாகும். இதில் சகதிகளை கழித்து மொத்த நீர்பிடிப்பு உயரம் 105 அடியாகும். இதில் கடந்த ஜூன் மாதம் ஆரம்பத்தில் அணையின் நீர்மட்டம் 71 அடியாக இருந்தது.

இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த காரணத்தால் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்தது.

இதன் காரணமாக அணைக்கதண்ணீர் வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் உயர்ந்தது. நேற்று முனதினமஇரவு பத்து மணிக்கு அணையின் நீர்மட்டம் 99.50 அடியாக இருந்தது. இதனால் பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் எந்த நேரத்திலும் தண்ணீர் திறக்கப்படும் என்று வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

webdunia photoWD
இந்த நிலையில் அணைக்கு தொடர்ந்து வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்த காரணத்தால் நேற்று காலை 8.30 மணிக்கு அணையில் இருந்து பவானி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

ஜூலை மாதத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையும். ஆகவே வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடிவரை தண்ணீர் வரவாய்ப்புள்ளது எனவே அணையின் பாதுகாப்பு கருதி இன்று காலை 100 அடியை தொட்டதும் தண்ணீர் திறந்துவிடப்பட்டதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil