Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மின்வாரியம்: 2009க்குள் பணி நிரந்தரம்-ஆற்காடு வீராசாமி

மின்வாரியம்: 2009க்குள் பணி நிரந்தரம்-ஆற்காடு வீராசாமி

Webdunia

, செவ்வாய், 17 ஜூலை 2007 (11:06 IST)
தமிழ்நாடு மின்வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளாகள் 2009ஆம் ஆண்டுக்குள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி உறுதி அளித்துள்ளார்.

மின்வாரிய ஊழியர் சம்மேனளத்தின் வெள்ளிவிழா மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் ஆற்காடு வீராசாமி, பல ஆண்டுகளாக பணியாற்றிய ஒப்பந்தத் தொழிலாளர்கள் அடையாளம் காணப்பட்டு மொத்தம் 21,600 பேர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் எல்லோரையும் ஒரே நேரத்தில் நிரந்தரம் செய்வது என்பது சிரமம். படிப்படியாக நிரந்தரம் செய்யலாம் என்று நிதித்துறை செயலரும் கூறியுள்ளார்.

எனவே 2007ல் தொடங்கி 2009க்குள் ஒப்பந்தத் தொழிலாளர்கள் எல்லோரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்.

இப்போது, 20 விழுக்காடு போனஸ் வழங்க முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டார். மின்வாரியத்தில் ஓய்வு பெற்ற ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil