தமிழகத்தில் சுமார் 6,000 கி மீ தூர சாலைகள் இருவழிச் சாலைகளாக மாற்றி அமைக்கப்படும் என்று நெடுஞ்சாலைத் துறை அமைச்சா வெள்ளக்கோயில் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூரில் சாலை அமைக்கும் பணிகளை ஆய்வு நடத்தியநெடுஞ்சாலைத் துறை அமைச்சா சாமிநாதன் செய்தியாளாகளை சந்தித்துப் பேசினார்.
அப்போது, இதுவரை 1,320 கி மீ தூர சாலைகள் இருவழிச் சாலைகளாக மாற்றப்பட்டுள்ளன. இதற்காக அரசு ரூ,729 கோடி ஒதுக்கியுள்ளது.
மேலும், கடம்பத்தூர், திருவாலாங்காடு, அம்பத்தூர், ஆவடி பகுதிகளில் ரயில்வே மேம்பாலங்கள் கட்ட ரூ.60 கோடி ஒதுக்கியுள்ளதாகவும் அமைச்சா கூறினார்.