Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ராமதாஸ் வந்தால் வரவேற்போம்:ஜெயலலதா

ராமதாஸ் வந்தால் வரவேற்போம்:ஜெயலலதா

Webdunia

, செவ்வாய், 10 ஜூலை 2007 (10:00 IST)
ராமதாஸ் எங்கள் கூட்டணிக்கு வந்தால் அவரை பாசத்துடன் வரவேற்போம் என்றும்,அவருக்கு உரிய மரியாதை அளித்து கவுரவமாக நடத்துவோம் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்

அதிமுக தலைமை கழகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மம்தா பானர்ஜி உடனான சந்திப்பு நட்பு ரீதியான சந்திப்பு என்றும், அவருடன் 3 வது அணிபற்றி பேசவில்லை என்றும் கூறினார்.

கூட்டுறவு சங்கங்களுக்கு மறுதேர்தல் நடத்த அறிவித்திருப்பது வெறும் கண்துடைப்பு என்ற அவர், ஒட்டு மொத்த தேர்தலையும் ரத்து செய்து விட்டு புதிதாக தகுதியானவர்களை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என்றார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் யாரை ஆதரிப்பு என்பது குறித்து இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்க இருப்பதாகவும், 3 வது அணியின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் உள்ள சவுதாலா வீட்டில் நடக்க உள்ளதாகவும் ஜெயலலிதா தெரிவித்தார்.

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தங்கள் கூட்டணிக்கு வந்தால் அவரை பாசத்துடன் வரவேற்போம் என்றும், அவருக்கு உரிய மரியாதை அளித்து கவுரவமாக நடத்துவோம் என்றும் அப்போது அவர் தெரிவித்தார்.

காவிரி நீர் சிக்கலில் முதலமைச்சர் கருணாநிதி தனது கடமையை செய்ய தவறிவிட்டதாக அவர் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil