Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிவாஜி படத்திற்கு தடைவிதிக்ககோரி வழக்கு

சிவாஜி படத்திற்கு தடைவிதிக்ககோரி வழக்கு

Webdunia

, திங்கள், 9 ஜூலை 2007 (16:30 IST)
ரஜினி நடித்து வெளிவந்துள்ள சிவாஜி படத்திற்கு தடைவிதிக்ககோரியும், ரூ.50 கோடி நஷ்ட ஈடு வழங்க கோரியும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், சிவாஜி படத்தில் ஒரு காட்சியில் தனியார் கல்லூரி நடத்தி அதிக கட்டணம் வசூலிக்கும் வில்லன் சுமனுடன் ரஜினி பங்கேற்கும் காட்சி இடம் பெறுகிறது.

அந்த காட்சியில் வில்லன் சுமனின் பின்னால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரது புகைப்படங்கள் இடம் பெறுகின்றன. இது அவர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது.

எனவே, சிவாஜி படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், ரூ.50 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் அவர் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த மனுவில் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை செயலர், சென்சார் போர்டு, நடிகர் ரஜினிகாந்த், ஏவிஎம் சரவணன், இயக்குனர் ஷங்கர் ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil