Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெயலலிதா மீது தேர்தல் ஆணையம் வழக்கு

ஜெயலலிதா மீது தேர்தல் ஆணையம் வழக்கு

Webdunia

, திங்கள், 9 ஜூலை 2007 (15:24 IST)
விதிமுறைகளை மீறி 4 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்ததற்காக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீது தேர்தல் ஆணையம் சிதம்பரம் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளது.

கடந்த 2001 ஆம் ஆண்டு நடந்த சட்டபேரவை தேர்தலில் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா ஆண்டிப்பட்டி, புவனகிரி, புதுக்கோட்டை,கிருஷ்ணகிரி ஆகிய நான்கு தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

இது விதிமுறைகளுக்கு மீறிய செயல் என்று திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜெயலலிதா மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.

இதையடுத்து, ஜெயலலிதா மீது வழக்கு தொடர சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியருக்கு தேர்தல் அணையம் ஆணைபிறப்பித்தது. இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் சார்பில் சிதம்பரம் மற்றும் புதுக்கோட்டை நீதிமன்றங்களில் ஜெயலலிதா மீது இன்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil