பாரதிய ஜன் சக்தி நிறுவனர் மற்றும் தலைவர் உமா பாரதி மீது தமிழக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
திருச்சியில் நடந்த கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட உமா பாரதி, சேது சமுத்திர கால்வாய் தூர்வாரும் பணியால் ராமர் பாலம் இடிக்கப்பட்டுவிடும் என்றும், சேது சமுத்திரப் பணியை நிறுத்த வேண்டும் என்றும் பேசினார்.
இந்த பேச்சு மதவாதத்தைத் தூண்டும் வகையில் அமைந்திருப்பதாகக் கூறி இந்திய அரசியலமைப்புச் சட்டம் 153(எ)ன் கீழ் உமா பாரதி மீது தமிழக அரசு நேற்று இரவு வழக்குப் பதிவு செய்துள்ளது.
மேலும், உமா பாரதி கூறுகையில், சேது சமுத்திரப் பணியை எதிர்த்து ராமேஸ்வரத்தில் இருந்து அயோத்தி வரை பாதயாத்திரை செல்லப்போவதாகவும் அறிவித்துள்ளார்.
திருச்சி வந்திருந்த முன்னாள் மத்தியப் பிரதேச முதலமைச்சரான உமா பாரதி நேற்று இரவு ரயில் மூலம் போபால் சென்றார்.
(பி.டி.ஐ.)