ரெயில்வே காலம் காட்டி, பஞ்சாங்கம் மட்டுமே அதிகம் விற்பதாக தகவல்!
கவிஞர் முகமது அலி எழுதிய "அறக்குரல்" நூல் அறிமுக விழா திருச்சியில் நடைபெற்றது. பி.எஸ்.என்.எல் துணைப் பொது மேலாளர் சஞ்சீவி தலைமை தாங்கினார். தெற்கு ரெயில்வே முதுநிலை துணைப் பொது மேலாளர் கார்மலுஸ் நூலை வெளியிட்டார்.
காரைக்கால் அரசு கல்லூரி இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழக தமிழ்த் துறை தலைவர் சாஸபு மரைக் காயக் நூலை அறிமுகப்படுத்தி பேசியதாவது, தற்போது நூல் ஆர்வம் என்பது குறைந்துவிட்டது. தமிழகத்தில் 6 கோடி பேர் இருந்தும் சொற்ப எண்ணிக்கையில் தான் நூல்கள் விற்கின்றன. இது மிகவும் வேதனையளிக்கிறது. ரெயில்வே காலம் காட்டி, பஞ்சாங்கம் ஆகிய இரு புத்தகங்கள் மட்டுமே அதிகம் விற்பனையாகும் நிலை, தமிழகத்தில் உள்ளது.
இன்றைய இளைஞர்கள் கையில் அலைபேசி தான் இருக்கிறதே தவிர அறிவை வளர்க்கும் புத்தகங்களை யாரும் வைத்திருப்பதில்லை. இப்படியொரு நிலையில் அனைத்து அம்சங்களும், தகவல்களும் தரும் ஒரு அற்புதமான "அறக்குரல்" எனும் நூலை முகமது அலி எழுதி வெளியிட்டு இருப்பது மிகவும் பாராட்டுக்கு உரியது. இந்நூல் சமய நல்லிணக்கத்தை வலியுறுத்தும் நூலாக அமைந்துள்ளது என்று அவர் கூறினார்.