Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகத்தில் ரூ.9,710 கோடி அந்நிய முதலீடு - கருணாநிதி!

தமிழகத்தில் ரூ.9,710 கோடி அந்நிய முதலீடு - கருணாநிதி!

Webdunia

, சனி, 7 ஜூலை 2007 (13:07 IST)
கடந்த 13 மாத கால திமுக ஆட்சியில் ரூ.9,710 கோடி அளவில் அந்நிய நிறுவனங்கள் முதலீடு செய்திருப்பதாக முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

சென்னை அருகே உள்ள மறைமலை நகரில் டாடா நிறுவன விழாவில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் கருணாநிதி, தமிழக அரசு தொழில்துறை வளர்ச்சிக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுத்து வருவதாக தெரிவித்தார்.

கடந்த 5 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் அந்நிய நிறுவனங்கள் ரூ.2,220 அளவில் கோடி தமிழகத்தில் முதலீடு செய்திருப்பதாக குறிப்பிட்ட அவர், கடந்த 13 மாத கால திமுக ஆட்சியில் ரூ.9710 கோடி அளவில் அந்நிய நிறுவனங்கள் முதலீடு செய்திருப்பதாக தெரிவித்தார்.

தொழிற்சாலைகளை நகர்ப்புறங்களில் மட்டுமல்லாமல் கிராமப்புற பகுதிகளிலும் விரிவுபடுத்த மக்கள் விரும்புவதாகவும், அதற்கான முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருவதாகவும் கருணாநிதி கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil