Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மேட்டூர் அணை நீர்மட்டம் 79.460

மேட்டூர் அணை நீர்மட்டம் 79.460

Webdunia

, வெள்ளி, 6 ஜூலை 2007 (12:39 IST)
கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் தென்மேற்கு பருவ மழையினால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்ததைத் தொடர்ந்து அணையின் நீர் மட்டம் 79.460 அடியாக உயர்ந்து உள்ளது.

அணைக்கு தற்போது வினாடிக்கு 25,100 கன அடி நீர் வீதம் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காக 2,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

காவிரி மீது கட்டப்பட்டுள்ள மேட்டூர் அணையின் முழு நீர் கொள்ளளவு 120 அடியாகும்.

Share this Story:

Follow Webdunia tamil