உயர் மின்னணு தொழில்நுட்ப தொழிற்சாலைகளில் உள்ள பணி வாய்ப்புக்களுக்கு ஏற்றவாறு தொழில்நுட்ப கல்வி திட்டத்தை மேம்படுத்துவது தொடர்பாக சிங்கப்பூரின் ஃபிளக்ஸ்ட்ரானிக்ஸ் நிறுவனம் அண்ணா பல்கலையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது!
இந்த ஒப்பந்தம் குறித்து செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள அண்ணா பல்கலை, மின்னணு தொழில்நுட்பத்தில் ஏற்பட்டு வரும் முன்னேற்றங்கள் குறித்து மாணவர்களுக்கு அவ்வப்போது தெரிவிக்க பயிற்சிப் பட்டறைகள், கருத்தரங்குகள், சிறப்பு பயிற்சி திட்டங்கள், தொழிற்கூடங்களில் நேரடி அனுபவம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்த ஒப்புக் கொண்டுள்ளதாகக் கூறியுள்ளது. (யு.என்.ஐ.)