Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

9 முதல் 16 வரை மருத்துவ கலந்தாய்வு

9 முதல் 16 வரை மருத்துவ கலந்தாய்வு

Webdunia

, புதன், 4 ஜூலை 2007 (11:01 IST)
மருத்துவக் கல்வியில் சேரும் மாணாக்கர்களுக்கான கலந்தாய்வு வரும் 9-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

மருத்துவ கல்வியில் சேரும் மாணாக்கர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு முடிவடைந்து வரும் 9 ஆம் தேதி மருத்துவத்திற்கான கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, இந்த ஆண்டு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணாக்கர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம், ஜுலை 9-ந் தேதியில் இருந்து ஜுலை 16-ந் தேதி வரை நடக்கிறது. தமிழகத்தில் உள்ள 3 மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவ கல்லூரிகளுக்கு அகில இந்திய மருத்துவ கலந்தாய்வு அனுமதி கிடைத்ததும் உரிய மாணவர்களை சேர்த்துக்கொள்வோம்.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுக் கட்டணம் ரூ.4 லட்சமாக நிர்ணயித்துள்ளன. இது தொடர்பாக ஆய்வு செய்ய அரசு அமைத்த ராமன் ஆணையத்தின் ஆயுள் இந்த மாதம் முடிகிறது. அந்த ஆணையம் தனது ஆய்வறிக்கையை ஓரிரு நாளில் சமர்ப்பிக்கும். அதில், அதிக கட்டணக் குறைப்பு பரிந்துரைக்கப்பட்டால் அதனை பின்பற்றுவோம். கட்டணக் குறைப்பு அதிக அளவில் செய்யப்படவில்லை என்றால் மேல்முறையீடு செய்வோம்.

தமிழகத்தில் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டிருக்கிறோம். முதுகலை மருத்துவப் பிரிவுகளில் இன்னும் கூடுதல் பாடங்களை சேர்க்க இருக்கிறோம்.

தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் படித்துவிட்டு வெளியேறும் எம்.பி.பி.எஸ். மாணவர்கள், கட்டாயம் அரசு மருத்துவமனைகளில் 3 ஆண்டுகள் பணிபுரிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil