Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வந்தனாவை வெறியேற்றக் கூடாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

Advertiesment
வந்தனாவை வெறியேற்றக் கூடாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

Webdunia

, செவ்வாய், 3 ஜூலை 2007 (20:14 IST)
நடிகர் ஸ்ரீகாந்த் வீட்டியில் இருந்து வந்தாவை வெளியேற்ற கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் ஸ்ரீகாந்துக்கும், வந்தனாவுக்கும் ரகசியமாக திருமணம் நடந்தது. முறைப்படி திருமணம் செய்வதற்கான நிச்சயதார்த்தமும் நடந்த நிலையில், வந்தனா குடும்பத்தினர் மீது மோசடி புகார் கூறப்பட்டது.

இதனால் ஸ்ரீகாந்த், வந்தனா திருமணம் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் வந்தனா கடந்த 31 ஆம் தேதி ஸ்ரீகாந்த் வீட்டில் குடியேறினார். இதையடுத்து ஸ்ரீ காந்த் பெற்றோர்கள் வீட்டை விட்டு வெளியேறினர்.

தனக்கும் ஸ்ரீகாந்திற்கும் திருமணம் நடந்து விட்டதால் தன்னை வீட்டை விட்டு வெளியேற்ற தடைவிதிக்கக் கோரியும், ஸ்ரீகாந்தவீட்டில் தொடர்ந்து வசிக்க அணுமதி கோரியும் வந்தனா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராமசுப்பிரமணியம், வந்தனா, ஸ்ரீகாந்த் வீட்டில் தொடர்ந்து வசிக்கலாம் என்றும், அதற்கு சட்டபூர்வமாக உரிமை உண்டு என்றும் உத்தரவிட்டார்.

Share this Story:

Follow Webdunia tamil