Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குறையை நேரில் கூறலாம் : ராமதாசுக்கு கருணாநிதி

குறையை நேரில் கூறலாம் : ராமதாசுக்கு கருணாநிதி

Webdunia

, செவ்வாய், 3 ஜூலை 2007 (16:11 IST)
அரசின் செயல்முறைகளில் ஏதாவது குறை இருந்தால், அவற்றை தன்னிடம் விளக்கிடலாம், அதை விடுத்து அறிக்கை விடுவதும், அதற்கு பதில் அளிப்பதும் இரண்டு கட்சிகள் இடையே வெறுப்பையும், சில நேரங்களில் பகையுணர்ச்சியையும் ஏற்படுத்தி விடுமேயானால், பின்னர் இரு தரப்பினரிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவது என்பது சிரமமான செயலாகி விடும் என்று முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சில நாட்களாக பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், அரசைப் பற்றியும், குறிப்பாக உயர் கல்வித் துறையைப் பற்றியும் தொடர்ந்து அறிக்கை விடுவதும், அதற்கு அந்த துறைகளின் அமைச்சர்கள் விளக்கம் அளிப்பதும் தோழமைக் கட்சிகள் இடையே உள்ள நல்லுறவை கெடுப்பதாக அமைந்து விடுமோ என்ற எண்ணத்தைப் பரவலாக ஏற்படுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

சுயநிதிக் கல்லூரிகள் அதிகக் கட்டணம் பெற்றதற்கான ஆதாரத்தை தோழமைக் கட்சி என்ற முறையில் மருத்துவர் ராமதாஸ் பெற்றுத் தருவாரானால், அதற்கு சட்டப்படி மாநில அரசினால் எத்தகைய நடவடிக்கையை எடுக்க முடியுமோ அதனை எடுக்க தாம் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு மாணவர்கள் நலன் காப்பதில் யாருக்கும் சளைத்தது அல்ல என்றும், மாணவர்களின் நலன்களை விட சுயநிதிக் கல்லூரி உரிமையாளர்களின் சொந்த நலனைப் பற்றி என்றைக்கும் கவலைப்பட்டது இல்லை என்றும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் கொள்ளை அடிப்பதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியிருப்பதை க
சுட்டிக்காட்டிய முதலமைச்சர் கருணாநிதி, சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யக் கூடிய அதிகாரம் மத்திய அரசின் அமைச்சர் அன்புமணியின் பொறுப்பிலே உள்ள இந்திய மருத்துவக் கவுன்சிலிடம் தானே உள்ளது என்று கூறியுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அரசு மீது ஏதாவது குற்றச்சாட்டுகளை கூறுவதும், அமைச்சர்கள் மீது குறிப்பிட்டு புகார்களைச் சொல்வதும், அதற்கு பதிலளிக்க மற்ற கடசியினரும், அமைச்சர்களும் தன்னிடம் அனுமதி கேட்பதும், நான் அதற்கு அணை போட்டு வைப்பதும், ஒரு சில சந்தர்ப்பங்களில் தனக்குத் தெரியாமலே ஒருசிலர் விளக்கங்களை அளிப்பது என்பதும் ஒரு நல்ல நீடித்து நிலைத்து இருக்க வேண்டிய தோழமைக்கு உகந்த செயலாக இருக்க முடியாது என்று கூறியுள்ளார்.

அரசின் செயல்முறைகளில் ஏதாவது குறை இருக்குமேயானால் தன்னிடம் விளக்கிடலாம். அதை விடுத்து அறிக்கை விடுவதும், அதற்கு பதில் அளிப்பதும் இரண்டுமே விரும்பத்தக்க தல்ல என்று தெரிவித்துள்ளார்.

இத்தகைய அறிக்கைகளால் இரு கட்சிகளிடையே அதிருப்தியும் வெறுப்பும் சில நேரங்களில் பகையுணர்ச்சியும் ஏற்படுத்தி விடுமேயானால், பின்னர் இரு தரப்பினரிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவது என்பது சிரமமான செயலாகி விடும் என்றும், இனியாவது இதைத் தவிர்ப்பது நல்லது என்றும் அவர் கூறியுள்ளார்..


Share this Story:

Follow Webdunia tamil