திருச்சியில் தமிழ் இதழ்கள் என்ற பெயரில் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது.
பன்னாட்டு லயன்ஸ் சங்கம் மற்றும் திருச்சி யூமால் முகமது கல்லூரி சார்பில் அங்குள்ள அரங்கில் தமிழ் இதழ்கள் கண்காட்சி 3 நாட்கள் நடைபெற்றது.
அமைச்சர் கே.என்.நேரு இதனை தொடங்கி வைத்தார். பன்னாட்டு லயன்ஸ் சங்கங்களின் மாவட்ட ஆளுநர் மனோகரன் தலைமை தாங்கினார். மேயர் சாருபாலா ஆர்.தொண்டைமான் குத்து விளக்கேற்றி வைத்தார்.
அரசியல், சமூகம், சினிமா, நாவல், இலக்கியம், இணைய தள இதழ்கள், தினசரி, வார, மாத, மாதமிருமுறை என மொத்தம் 6000 இதழ்கள் இதில் இடம் பெற்றிருந்தன.
கடந்த 50 ஆண்டு கால நமது இந்திய மற்றும் வெளிநாட்டில் வெளிவரும் தமிழ் இதழ்கள் சேகரித்து வைத்து இருந்தது இந்த கண்காட்சியில் இடம்பெற்றிருந்ததாக கண்காட்சி அமைப்பாளர், க.பட்டாபிராமன் தெரிவித்தார்.