Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பொறியியல் தரவரிசைப் பட்டியல் வெளியீடு

பொறியியல் தரவரிசைப் பட்டியல் வெளியீடு

Webdunia

, செவ்வாய், 3 ஜூலை 2007 (10:51 IST)
பொறியியல் படிப்பில் சேர்வதற்காக விண்ணப்பித்த மாணாக்கர்களுக்கான தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் நேற்று மாலை வெளியிட்டது.

இதில் ஒரு மாணவி உட்பட 6 பேர் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றனர்.

தமிழ்நாட்டில் 250 அரசு மற்றும் தனியார் பொறியியலகல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் மாணவ-மாணவிகள் சேர்வதற்கு இந்த ஆண்டு முதல் நுழைவுத்தேர்வு கிடையாது.

சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டதால் பொறியியல் படிப்பில் சேர்வதற்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட உயர்நீதிமன்றம் தற்காலிகமாக தடை விதித்திருந்தது. இந்த வழக்கு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, நேற்று மாலையே தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது.

அண்ணபல்கலைக்கழக வளாகத்தில் தரவரிசைப் பட்டியலை அமைச்சர் பொன் முடி வெளியிட்டார்.

அப்போது அவர் பேசுகையில், பொறியியல் கலந்தாய்விற்கு 94,960 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 90,803 பேரின் விண்ணப்பங்கள் தகுதி உடையவையாகும். 4,157 பேர் விண்ணப்பங்கள் சரியாக இல்லாத காரணத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளன.

மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு முடிந்த மறு நாள் பொறியியல் கலந்தாய்வு தொடங்கும். காரணம் மருத்துவம் கிடைக்காத மாணவர்கள் பொறியியல் சேர வசதியாக இருக்கும் என்று கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil