ஈரோடு மாவட்ட வனப்பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் மாவட்ட காவல் துறையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் அந்தியூர் பகுதி, வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியாகும். மாவட்டத்தில் தாளவாடி, கடம்பூர், பர்கூர் ஆகியவை மலைப் பகுதியில் இருக்கும் வன கிராமங்களாகும். சந்தனக் கடத்தல் வீரப்பன் தன் கூட்டாளிகளுடன் இந்த வனப் பகுதியில்தான் பல வருடங்களாக பதுங்கி இருந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வனப் பகுதியில் தற்போது தீவிரவாதிகள் யாராவது பதுங்கியுள்ளனரா என்ற சந்தேகத்தில் இன்று அதிகாலை 4 மணி முதல் தாளவாடி, கடம்பூர் வனப்பகுதியில் சத்தியமங்கலம் காவல் துணை கண்காணிப்பாளர் சுப்பிரமணியம் தலைமையில் காவல் துறையினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர்.