சிமெண்ட், இரும்பு ஆகியவற்றின் விலை ஏற்றத்தை உடனடியாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை இந்திய கட்டட கட்டுமான சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது!
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கட்டட கட்டுமான சங்கத்தின் செயலாளர், ஏ.வி. ராமசாமி, ஓராண்டில், சிமெண்டின் விலை ரூ.165ல் இருந்து ரூ.240 ஆக உயர்ந்திருப்பதாகத் தெரிவித்தார்.
உற்பத்தித் தீர்வை மற்றும் விற்பனை வரி உயர்ந்திருப்பதால் சிமெண்ட் விலை உயர்ந்திருப்பாக தெரிவித்த அவர், சிமிண்டின் விலையை ரூ.170 ஆக குறைத்தால் மட்டுமே தங்களால் சிமெண்ட் ஏற்றுமதி செய்ய முடியும் என்றார்.
கடந்த 6 மாத காலத்தில் ஒரு டன் இரும்பின் விலை ரூ.26,000ல் இருந்து ரூ.33,000 ஆக உயர்ந்திருப்பதாக அவர் கூறினார். எனவே சிமெண்ட், இரும்பு விலையை கடுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.