மதுரை மேற்குத் தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் கே.எஸ். ராஜேந்திரன் 31,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
அவர் வெற்றி பெற்றதற்கான உறுதிச் சான்றிதழை தேர்தல் அதிகாரி ராஜேந்திரனிடம் வழங்கினார்.
நடந்து முடிந்த வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் ராஜேந்திரன் 60,933 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அதற்கு அடுத்தபடியாக அஇஅதிமுக வேட்பாளா செல்லூர் ராஜூ 29,818 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் 21,272 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
மதுரை மேற்குத் தொகுதியில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற எஸ்.வி. சண்முகம் மரணமடைந்ததை அடுத்து அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவித்தது.
கடந்த 26ஆம் தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் நடைபெற்றன. இதையடுத்து இன்று வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்றன. இதில் முதல் சுற்றில் இருந்தே காங்கிரஸ் வேட்பாளர் ராஜேந்திரன் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார். இறுதியில் 31,000 வாக்குகள் வித்தியாசத்தில் ராஜேந்திரன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதையொட்டி, காங்கிரஸ் அலுவலகங்களில் ராஜேந்திரனின் வெற்றி கொண்டாடப்பட்டு வருகிறது.