மதுரை இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளில் எண்ணப்பட்டதில் காங்கிரஸ் வேட்பாளர் கே.எஸ். ராஜேந்திரன் ஏறக்குறைய 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிப்பதால் இவரது வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது.
வாக்குகள் எண்ணப்பட்டு, தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் வேட்பாளர் 56,670 வாக்குகளும், அஇஅதிமுக வேட்பாளர் 28,477 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் 19,455 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
அஇஅதிமுக வேட்பாளரை விட சுமார் 20,000 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருப்பதால் காங்கிரஸ் வேட்பாளர் ராஜேந்திரனின் வெற்றி ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுவிட்டது.
இதையடுத்து மதுரை மேற்குத் தொகுதியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் பரிமாரியும் காங்கிரஸின் வெற்றிக் கொண்டாடப்பட்டு வருகிறது.