Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தேர்தல் ஆணையத்தை அச்சுறுத்தவில்லை: கருணாநிதி

Advertiesment
தேர்தல் ஆணையத்தை அச்சுறுத்தவில்லை: கருணாநிதி

Webdunia

, சனி, 23 ஜூன் 2007 (15:03 IST)
தேர்தல் ஆணையத்தை தாம் அச்சுறுத்தவில்லை என்றும், இது தொடர்பாக வெளியான தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என்றும் முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

மதுரை மேற்குத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்ய முதலமைச்சர் கருணாநிதி இன்று காலை மதுரை வந்தார். மதுரை வந்த அவருக்கு, ரயில் நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, மதுரை இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு அதிக அளவில் இருப்பதாக கூறினார்.

மதுரை இடைத்தேர்தல் தள்ளிவைப்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்தை தாம் அச்சுறுத்த வில்லை என்றும், இது தொடர்பாக வெளியான தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என்றார்.

இன்று இரவு செல்லூர் 60 அடி சாலையில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசுகிறார். அவருடன் தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil